கிழக்கு அயோவா தமிழ்ச் சங்கம், இது நம் சிடார் ரேபிட்ஸில் வாழும் தமிழர்களின் கூட்டமைப்பாகும். இங்கு வாழும் தமிழர்கள், தங்கள் தாய் மொழியான தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாடு, கலை இலக்கியங்களை கற்கவும், பேணி வளர்க்கவும், இங்குள்ள தமிழர்களின் நலன்களுக்கு உதவவும், புதியதாய் சிடார் ரேபிட்ஸ் புலம் பெயரும் தமிழர்களுக்கு வழிகாட்டவும், தமிழால் தமிழர்களாய் ஒன்றிணைந்து, ஒருவருக்கொருவர் சகோதரத்துவத்துடன் வாழக் களம் அமைப்பதை நோக்கமாகக் கொண்டு அமெரிக்க மண்ணின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட இலாப நோக்கமற்ற அமைப்பாகும்.

இந்தச் சங்கமானது தன்னார்வலர்களைக் கொண்டு இயங்குகிறது. இச்சங்கத்தில், உங்கள் முழு ஈடுபாட்டையும், உங்களால் முடிந்த பங்களிப்பையும் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.